வழி கேட்பது போல் நடித்து பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், பெண் டாக்டரிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார்.;

Update:2026-01-04 09:30 IST

AI Generated Image

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிக்கபனவரா பகுதியில் மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண் டாக்டர், பணி முடிந்து இரவில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் விடுதியின் வாசல் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெண் டாக்டரிடம் வழி கேட்பதுபோல் பேச்சு கொடுத்துள்ளார்.

அவரை தவிர்த்துவிட்டு பெண் டாக்டர் விடுதியின் வெளிக்கதவை திறக்க முற்பட்டபோது, அந்த வாலிபர் பெண் டாக்டரை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் கூச்சலிடவே, இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் இது குறித்து பெண் டாக்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சி.சி.டி.வி. ஆதாரங்களின் அடிப்படையில் துமகுரு பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்