போதைப்பொருளுடன் பிடிபட்ட எம்.எல்.ஏ. மகன்
போலீசார் நடத்திய பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது.;
நகரி,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நார்சிங் பகுதியில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசாருடன் இணைந்து நார்சிங் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 2 பேரை கைது செய்தனர்
இதில், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ ஆதிநாராயண ரெட்டியின் மகன் சுதீர் ரெட்டி என்பவரும் போதைப்பொருளுடன் பிடிபட்டார். அவருடன் போலீசார் நடத்திய பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாக சுதீர் ரெட்டி இரண்டு முறை பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.