சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு
மேகாலயா ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.
முன்னதாக இந்த வழக்கில், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய அரசு வக்கீலின் கருத்து அடிப்படையிலேயே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததாகவும், இருப்பினும் தேவையின்றி மேல்முறையீடு செய்ததற்காக அபராதம் விதிக்கப்படுவதாகவும் கூறியது. இது, சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல் என்றும் தெரிவித்தது.