காய்கறி கடையில் 550 கிலோ தக்காளி திருட்டு

காய்கறி கடையில் தக்காளி திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-08-18 18:45 GMT

அல்சூர்:

பெங்களூருவில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் விலை குறைவுக்கு மத்தியிலும் தக்காளி திருடப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. ெபங்களூரு மர்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் காய்கறி வியாபாரி. இவர் சம்பவத்தன்று சிவாஜிநகர் மார்க்கெட்டில் இருந்து 550 கிலோ தக்காளியை வாங்கி தனது கடையில் விற்பனைக்கு வைத்திருந்தார். இந்த நிலையில் அவரது கடைக்கு ஆட்டோவில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த தக்காளி பெட்டிகளை திருடிவிட்டு தப்பி சென்றனர்.

மறுநாள் காலையில் பிரசாந்த், கடைக்கு வந்தபோது தக்காளி திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது மர்மநபர்கள் தக்காளியை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அதுகுறித்து அவர் அல்சூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருடப்பட்ட தக்காளி ரூ.37 ஆயிரம் இருக்கும் என போலீசார் கூறினர். மேலும் தக்காளி திருடியதாக 15 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்