தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து கடத்தல் - நூதன மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கேரளாவில், தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து நூதனமாக கடத்த முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-10-26 21:06 IST

கண்ணூர்,

கேரளாவில், தங்கத்தை திரவமாக்கி பால் பவுடரில் கலந்து நூதனமாக கடத்த முயற்சித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

துபாயில் இருந்து கண்ணூர் விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, தங்கத்தை ரசாயனக் கரைசலில் கலந்து உள்ளாடையில் மறைத்து கடத்த முயன்ற நஜீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், பால் பவுடர் உள்ளிட்டவற்றில் மறைத்து தங்கத்தை கடத்த முயன்ற முகம்மது நிஷான் என்பவரையும் கைது செய்தனர். இருவரிடமும் இருந்து 745 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்