உத்தர பிரதேசம்: பசுவதை வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

பசுமாட்டைக் கொன்றதாக பரவிய வதந்தியை தொடர்ந்து 45 வயதான காசீம் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-03-12 14:33 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூரில் கடந்த 2018-ம் ஆண்டு பசுமாட்டைக் கொன்றதாக பரவிய வதந்தியை தொடர்ந்து 45 வயதான காசீம் என்ற நபரை சிலர் அடித்துக் கொலை செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 62 வயதான சமாயுதீன் என்ற நபர் பலத்த காயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு ஹாப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதன்படி ராகேஷ், ஹரிஓம், யுதிஷ்டிர், ரின்கு, கரன்பால், மணீஷ், லலித், சோனு, கப்டன் மற்றும் மங்கேராம் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 10 பேருக்கும் தலா 58 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்