இனி ஹலோவிற்கு பதிலாக 'வந்தே மாதரம்'... மராட்டிய மந்திரி அதிரடி உத்தரவு..!
மராட்டியத்தில் அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்தில் தொலைபேசியில் 'ஹலோ' என்பதற்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் அரசு அதிகாரிகள் அனைவரும் இனி அலுவலக நேரத்தில் தொலைபேசியில் உரையாட நேரிட்டால் 'ஹலோ' என்பதற்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மராட்டியத்தின் புதிய கலாச்சாரத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பாஜகவின் சுதிர் முங்கண்டிவார், வாய்மொழியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமாக இது குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்தை போற்றும் விதமாக 'வந்தே மாதரம்' என ஒவ்வொருவரும் உச்சரிப்பது நமது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.