ம.பி.யில் அடுத்த முதல்-மந்திரி யார்? நாளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சிவராஜ் சிங் சவுகான் தனது 'எக்ஸ்' தளத்தில், 'ராம்-ராம்' என பதிவிட்டது பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டது.

Update: 2023-12-10 03:52 GMT

Image Courtesy : ANI

போபால்,

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் அங்கு அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முதல்-மந்திரி பதவி தனக்கே வேண்டும் என அடம்பிடித்து நிற்கும் சிவராஜ் சிங் சவுகான், தனது 'எக்ஸ்' தளத்தில், 'ராம்-ராம்' என பதிவிட்டது பா.ஜ.க.வினரிடையே பரபரப்பான விவாதத்தை கிளப்பிவிட்டது.

இன்னொரு பக்கம் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் பட்டேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதல்-மந்திரி பதவியை கைப்பற்றும் முனைப்பில் படு தீவிரமாக உள்ளனர். இவர்களுடன் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் நாளை திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேச பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்