காட்டுயானைகள் அட்டகாசம்; பயிர்கள் நாசம்

காட்டுயானைகள் அட்டகாசத்தால் பயிர்கள் நாசமானது.

Update: 2022-11-01 18:45 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா சிரிகெரே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது கோடி கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் பாக்கு, சோளம், வாழை ஆகியவற்றை முக்கிய பயிர்களாக சாகுபடி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானகள் அந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

மேலும் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணப்பா என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த சோளம், வாழை, பாக்கு மரங்களை காட்டுயானைகள் நாசப்படுத்தின. பின்னர் அவைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதுபற்றி அறிந்த கிருஷ்ணப்பா மற்றும் கிராம மக்கள் வேதனையும், பீதியும் அடைந்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்