நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு

நடிகை ரம்பா அவரது கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2017-04-05 13:21 GMT
சென்னை,

தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.

அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது.

நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில்  இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

மேலும் செய்திகள்