கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-06-14 23:09 GMT
சென்னை, 

சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிலேயே 4-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைக்கு 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக இன்றைக்கு கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்து விடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கரும்பு ஆலைகள் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிற அதேநேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூ.500 கோடிக்கு மேலாக இருக்கிறது. இதை பெற்றுத்தருவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே, கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடன் நிவாரணம் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லை எனில் கரும்பு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக நடத்த வேண்டியநிலை ஏற்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்