கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் - முதலமைச்சர் பழனிசாமி

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-09 09:21 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான்.13 மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் முறைகேடு நடந்துள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம். கடந்த 4 மாதத்தில் 41 லட்சத்தில் இருந்து 46 லட்சமாக விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முறைகேட்டில் 18 பேர் கைது, 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பசுமை வழிச்சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம், சாலைக்கு நிலம் எடுப்பது மட்டுமே மாநில அரசின் பங்கு. திமுக ஆட்சியின் போதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் சாலை அமைக்க மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. பசுமை வழிச்சாலை - உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து சாலை திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்