வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 06:46 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். 

இதனை ஏற்று, கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பேரறிவாளனுக்கு சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்