தஞ்சை மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சை மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-05 22:36 IST

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் சமாதி வளாகத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. அந்த வகையில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வான ஆராதனை விழா வருகிற 7-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 7-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 24-ம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்