தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரெயில்

தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2024-04-17 21:56 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தாம்பரம் - கன்னியாகுமரி, சென்னை எழும்பூர் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மற்றும் 20-ந்தேதி மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து வரும் 19, 21 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து இன்று(வியாழக்கிழமை) மற்றும் 20-ந்தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06003) மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை சென்றடையும். மறுமார்க்கமாக, கோவையில் இருந்து வரும் 19, 21 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06004) மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்