"வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு

பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Update: 2022-11-30 16:52 GMT

கோவை,

கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கான பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்.எ.வ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும், சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம் என்று தெரிவித்தார்.

வளர்ச்சி திட்டங்களின் மூலம் பொதுமக்கள் தான் பயன்பெறுகிறார்கள் என்று தெரிவித்த அவர், திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்