அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா

அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.;

Update:2023-05-01 23:47 IST

அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜெர்ரி, பாபு, சரவணன், நித்யா ஷியாம்குமார், தூய்மை பணியாளர்கள் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்