ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-07-21 03:00 IST

ஊட்டி

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியதாகவும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகவும் கூறி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து உள்ளது. மளிகை பொருட்களுக்கு இணையாக காய்கறி விலையும் அதிகரித்து விட்டது. இதனால் சாமானியர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்