மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி கொலை - போலீசார் விசாரணை

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க. நிர்வாகி மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-02-15 09:19 IST

மதுரை,

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சக்திவேலின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்