நாங்குநேரி பள்ளி மாணவரின் தாயிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
சென்னை,
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேரும், இன்று காலை ஒருவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் வீடியோ காலில் நலம் விசாரித்தார்.