கோவை: கோவில் தேரோட்ட திருவிழாவில் நடனமாடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தேரோட்ட திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.

Update: 2024-05-22 14:38 GMT

கோவை,

கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனிடையே தேர் பவனிக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்களுடன் உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்