சுருளி அருவியில் நீராடிய பக்தர்கள்

சுருளி அருவியில் பக்தர்கள் நீராடினர்.

Update: 2023-04-14 18:45 GMT

தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா, ஆன்மிக தலமாக சுருளி அருவி விளங்குகிறது. இங்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அருவியில் புனித நீராடுவார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று, சுருளி அருவியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருவியில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். பின்னர் அங்குள்ள சுருளி வேலப்பர், சுருளி ஆண்டவர் விபூதி குகை கோவில் ஆதி அண்ணாமலையார் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அருவியில் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்