வெப்படை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-11-25 18:45 GMT

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை உப்புபாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). விவசாயி. இவருடைய மகள் மஞ்சுவர்ஷினி (19). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மஞ்சுவர்ஷினி தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.

விசாரணை

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மஞ்சுவர்ஷினி நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மஞ்சுவர்ஷினி இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்