பள்ளிகளில் போதைபொருள் பயன்படுத்தினால் தகவல் தெரிவிக்கலாம்

பள்ளிகளில் போதை பொருள் பயன்படுத்தும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கூறினார்.

Update: 2023-10-09 20:11 GMT

அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமையில் மாணவர்களுக்கான போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்பு, குடும்பம் பாதிப்பு குறித்து விளக்கி கூறினார்.மேலும் மாணவ-மாணவிகள் சாதி பாகுபாடு இல்லாமல் பழக வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. போதை பொருள் பயன்படுத்தும் மாணவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்