புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Update: 2024-04-04 04:41 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும், அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்