போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

2023- ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2024-01-11 13:46 GMT

சென்னை, 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்படி பெரும்பாலான ஊழியர்கள் வெளி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2023- ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், ஊழியர்கள் ஆண்டின் கடைசி நாளில் வேலைக்கு வந்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கபடுகிறது.

இதில் 200 நாட்கள் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625 ரூபாயும், 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 நாட்கள் முதல் 151 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85-ம் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்