தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு
காலை 9 மணி நிலவரப்படி
கன்னியாகுமரி: 11.92 சதவிகிதம்
திருநெல்வேலி: 11.39 சதவிகிதம்
தென்காசி: 11.82 சதவிகிதம்
ராமநாதபுரம்: 11.79 சதவிகிதம்
திருவள்ளூர்: 12.31 சதவிகிதம்
வடசென்னை: 9.73 சதவிகிதம்
தென்சென்னை: 10.08 சதவிகிதம்
மத்திய சென்னை: 8.59 சதவிகிதம்
ஸ்ரீபெரும்பதூர்:11.18 சதவிகிதம்
காஞ்சிபுரம்: 12.25 சதவிகிதம்
அரக்கோணம்: 12.64 சதவிகிதம்
வேலூர்: 12.76 சதவிகிதம்
கிருஷ்ணகிரி: 12.57 சதவிகிதம்
தருமபுரி: 10.04 சதவிகிதம்
திருவண்ணாமலை 12.80
ஆரணி: 12.69 சதவிகிதம்
விழுப்புரம்: 13.97 சதவிகிதம்
கள்ளக்குறிச்சி: 15.10
சேலம்: 14.79 சதவிகிதம்
நாமக்கல்: 14.36 சதவிகிதம்
ஈரோடு: 13.37 சதவிகிதம்
திருப்பூர்: 13.13 சதவிகிதம்
நீலகிரி: 12.18 சதவிகிதம்
கோவை: 12.16 சதவிகிதம்
பொள்ளாச்சி: 13.36 சதவிகிதம்
திண்டுக்கல்: 13.16 சதவிகிதம்
கரூர்: 14.41 சதவிகிதம்
திருச்சி: 11.82 சதவிகிதம்
பெரம்பலூர்: 14.35 சதவிகிதம்
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார். வாக்களித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்து இருப்பது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு எடுத்த முடிவு. அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.
*கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஒரு மணிநேரமாக தொடங்காத வாக்குப்பதிவு
*வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் என தகவல்
*கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளியில் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவந்தும் வேலை செய்யவில்லை
*தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவை தொடங்க நடவடிக்கை
*வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
அனைத்து இடங்களிலும் நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும்- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
வரிசையில் நின்று வாக்களித்த மு.க. ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்களித்தார். தனது மனைவியுடன் வந்து வந்து முதல் அமைச்சர் தனது வாக்கினை பதிவு செய்தார். வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை முதல் அமைச்சர் ஆற்றினார்.
சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
தமிழக பா.ஜனதா தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.