பண இரட்டிப்பு மோசடி

பண இரட்டிப்பு மோசடி பற்றி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.;

Update:2022-11-11 20:48 IST


ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பகுதியை சேர்ந்த இப்ராகிம், வஜியா பானு, சீனி பர்வீன் பாத்திமா, நல்லம் மாள் ராணி ஆகியோர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் சிவஞானபுரம் ரோடு தெருவை சேர்ந்த மர்சூக் ரகுமான் மற்றும் அவரின் மனைவி சகிலா பர்வீன் ஆகியோர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் எங்களிடம் வந்து தங்ககாசு திட்டத்தில் முதலீடு செய்தால் ஒரே வருடத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், ஏற்கனவே இத்திட்டத்தில் முதலீடு செய்து ஏராளமானோர் ரூ.பல லட்சம் சம்பாதித்து நல்ல நிலையில் உள்ளதாக ஆசை வார்த்தை கூறினர். அவர்களின் பேச்சை நம்பி நாங்கள் உள்பட உறவினர்கள், நண்பர்கள் என பலர் அவர்களிடம் முதலீடு செய்தோம். பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் அதற்காக கடன் பத்திரம் எழுதி கொடுத்தனர். ஓராண்டு காலம் முடிந்த நிலையில் அவர்களிடம் சென்று பணத்தை கேட்டபோது தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். தங்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த கணவன் மனைவி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். கணவன், மனைவி 2 பேரும் தங்ககாசு திட்டத்தில் பணத்தினை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்து உள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்