கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் - வெளியான புதிய தகவல்

தாக்குதல் காரணமாக கப்பலில் உள்ள மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-23 17:38 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பலின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன்படி இந்திய பெருங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூருக்கு வந்து கொண்டிருந்த எம்.வி செம் என்ற கப்பல் மீதுதான் டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. போர்பந்தரில் இருந்து 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கப்பலில் தீ பிடித்தது. கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதிலும் கப்பலின் இயக்கம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. கப்பலில் பயணம் செய்த அனைத்து சிப்பந்திகளும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பலுக்கு உதவ அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களையும் கடற்படை அலர்ட் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கப்பலில் இருந்த 22 பேரில் 21 இந்தியர்கள் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். காலை 10 மணி அளவில் மின்னஞ்சல் வழியாக கப்பலின் ஏஜென்ட் மூலம் உதவி கோரப்பட்டது. தாக்குதல் காரணமாக கப்பலில் உள்ள மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்