நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்; முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-25 23:32 GMT

சென்னை,

தமிழக அரசின் நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து உப கோட்டங்களில் பணிபுரியும் அனைத்து உதவி செயற்பொறியாளர்களுக்கும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களை வழங்கிடும் விதமாக, 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

அந்த வாகனங்களை நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவு உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை உதவி செயற்பொறியாளர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.அசோகன், நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பிரிவின் தலைமைப் பொறியாளர் க.பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்