சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமண நிகழ்வில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், வைத்திலிங்கத்திற்கு சசிகலா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2022-09-09 06:46 GMT

சென்னை

ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவராக இருக்கும் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்தார். தஞ்சாவூரில் ஒரத்தநாடு காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்திப்பு சசிகலாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார் வைத்திலிங்கம். சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் அணியின் முதல் சந்திப்பு இது தான்..அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்