பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2023-07-24 18:13 IST

சென்னை,

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள், உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்