ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்ட 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர்

ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்ட 18 ஒட்டகங்களை போலீசார் மீட்டனர். பெங்களூரு கோசாலைக்கு அந்த ஒட்டகங்களை அனுப்பி வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2022-06-30 17:08 GMT

ஓசூர்:

ஒட்டகங்கள்

பக்ரீத் பண்டிகையைமுன்னிட்டு 18 ஓட்டகங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஒட்டகங்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து ஓசூரில் ஒரு தனியார் இடத்தில் பாதுகாப்பாக அந்த ஒட்டகங்கள் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் அந்த ஒட்டகங்களை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு கோசாலையில் ஒப்படைக்க ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.

இன்று

அதன்படி கர்நாடக பிராணிகள் தயா சங்க கோசாலையின் செயலாளர் சுனில் துகர் என்பவருக்கு, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கடிதம் எழுதி, ஒட்டகங்களை அங்கு அனுப்ப அனுமதி கேட்டுள்ளார். இதையடுத்து ஓசூரில் உள்ள 18 ஒட்டகங்களும், பெங்களூரு கோசாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்