குழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

குமாியில் 1,221 பள்ளிகளில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

Update: 2023-10-16 18:45 GMT

தமிழகத்தை குழந்தை திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் மாதம் 16-ந் தேதி அன்று (அதாவது நேற்று) வழிபாட்டு கூடத்தில் 'குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு' என்ற பெயரில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தை திருமணத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,221 பள்ளிகளில் நேற்று காலை நடந்த வழிபாட்டு கூடத்தின்போது மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர்.

அந்த வகையில் நாகர்கோவிலில் கோட்டார் கவிமணி பள்ளி, டி.வி.டி. பள்ளி, டதி பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். உறுதி மொழி நிகழ்ச்சிக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமை தாங்கினர். இதில் ஆசிரியா்கள், மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்