சங்கடகர சதுர்த்திையயொட்டி ராசிபுரம் இரட்டை விநாயகர் ேகாவிலில் சிறப்பு அபிஷேகம்
ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் கடைவீதியில் பிரசித்தி பெற்ற இரட்டை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி இரட்டை விநாயகருக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், அரிசி மாவு, இளநீர், எலுமிச்சை, சந்தனம் உள்பட 13 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர்.