வாலிபரிடம் பணம் பறித்தவர்கள் கைது

மேலூரில் வாலிபரிடம் பணம் பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-02 01:35 IST

மதுரை,

மதுரை மேலூர் பூதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சூரங்கமாலை (வயது 23). இவர் சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பாரில், சப்ளையராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த 3 பேர், அவரிடம் குடிக்க பணம் கேட்டு மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமங்கலத்தைச் சேர்ந்த கவியரசன் (23), முல்லை நகரைச் சேர்ந்த ராஜா (30) ஆகியோரை கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்