சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update:2023-08-13 02:07 IST

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலான தேவநாயகி அம்மன் சமேத சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்