பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று காலை 11.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2023-12-18 13:47 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜன்பூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்