பாகிஸ்தானில் மெக்கானிக் கடையில் குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிளில் பொருத்திய வெடிகுண்டு வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.;

Update:2023-05-20 03:22 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துங்வா மாகாணம் பெஷாவர் நகரில் ரிங் ரோடு அருகே மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை உள்ளது. இங்கு கடை ஊழியர்கள் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் கடையில் இருந்த ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் பொருத்திய வெடிகுண்டு வெடித்து இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்