#லைவ் அப்டேட்ஸ்: லூகன்ஸ் மாகாணத்தை முழுவதும் கைப்பற்றிவிட்டோம் - ரஷியா

உக்ரைன் மீது ரஷியா இன்று 131-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

Update: 2022-07-03 22:58 GMT

Image Courtesy: AFP






Live Updates
2022-07-04 08:30 GMT


அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.6 டிரில்லியன் ரூபிள் செலவைக் குறைக்க ரஷியாவின் நிதி அமைச்சகம் முன்மொழிகிறது.

ரஷியாவின் நிதி அமைச்சகம் 2023-2025 ஆம் ஆண்டில் போக்குவரத்து அமைப்புகள், அறிவியல் மற்றும் பல முயற்சிகளின் வளர்ச்சிக்கான நிதியைக் குறைக்க பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2022-07-04 07:30 GMT


டொனெட்ஸ்க் பகுதியில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 25 பேர் காயமடைந்தனர் - அம்மாகாண கவர்னர் தகவல்

இதுதொடர்பாக டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோவின் மேலும் கூறுகையில், “ஆறு பொதுமக்கள் ஸ்லோவியன்ஸ்கில், ஒருவர் அவ்திவ்காவில், ஒருவர் பாக்முட்டில் மற்றும் ஒருவர் ஜைட்சேவில் நேற்று கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் குழந்தைகள்” என்று அவர் தெரிவித்தார்.

2022-07-04 06:36 GMT


ரஷியாவின் போரில் குறைந்தது 345 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 644 பேர் காயமடைந்தனர் - வக்கீல் ஜெனரல் அலுவலகம் தகவல்

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் போர்கள் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளில் உயிரிழப்புகளை சேர்க்காததால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2022-07-04 05:30 GMT


கிரிமியாவிலிருந்து கெர்சன் மாகாணத்திற்கு ரஷியா வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக உக்ரைனின் பொதுப் பணியாளர்கள் கூறுகையில், ரஷியப் படைகள் 17 கார் வெடிமருந்துகளை ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியாவிலிருந்து கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள மிர்னில் உள்ள ரெயில் நிலையத்திற்கு இன்று கொண்டு சென்றனர் என்று தெரிவித்துள்ளனர். 

2022-07-04 04:30 GMT


கார்கிவ் மாகாணத்தில் ரஷியாவின் குண்டு வீச்சு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷியப் படைகள் பெஸ்ருக்கி சமூகத்தின் மீது நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக சமூகத்தின் தலைவரான வியாசெஸ்லாவ் சடோர்னென்கோ தெரிவித்தார்.

இதன்படி 52 மற்றும் 55 வயதுடைய இரு ஆண்களும், 41 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் 81 வயதான பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

2022-07-04 02:30 GMT


உக்ரைனின் இராணுவம் தெற்கு உக்ரைனில் 47 ரஷிய வீரர்களை தோற்கடித்துள்ளதாக தகவல்

மேலும் இதுதொடர்பாக உக்ரைனின் "தெற்கு" செயல்பாட்டுக் கட்டளை கூறுகையில், “ இரண்டு சுயமாக இயக்கப்படும் பீரங்கி அமைப்புகள், ஒரு ஹோவிட்சர், ஒரு ரேடார் அமைப்பு, ஒரு சமிக்ஞை புலனாய்வு நிலையம், மூன்று கவச வாகனங்கள் மற்றும் ஓர்லான்-10 UAV ஆகியவற்றை நேற்று அழித்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனின் ஆயுதப் படைகள் மைக்கோலைவ் பகுதியில் உள்ள ஒரு வெடிமருந்துக் கிடங்கையும் அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-07-04 01:30 GMT


ரஷிய ராணுவம் சுமி மாகாணத்தில் உள்ள 230 க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின - கவர்னர் தகவல்

இதுதொடர்பாக சுமி ஒப்லாஸ்ட் கவர்னர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி கூறுகையில், இந்த பகுதியில் உள்ள ஐந்து சமூகங்களான Znob-Novhorodske, Velyka Pysarivka, Novoslobidske, Bilopillia மற்றும் Khotin ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2022-07-03 22:58 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 131-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷியா இன்று அறிவித்துள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷியா நேற்று அறிவித்தது. இதன் மூலம் லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்