கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ... ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.;

Update:2022-07-25 21:23 IST

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


மோசமான வறட்சி காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ பரவத்தொடங்கிய நிலையில், அவற்றை அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

மிட்பைஸ் நகரத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்