ஆன்மிகம்
வராக ஆஞ்சநேயர்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது.
வானர முகத்துடன் இருப்பவரே ஆஞ்சநேயர். ராமபிரானின் தூதனாக இருந்து அவர் இட்ட கட்டளைகளை நிைறவேற்றி, அவரது மனதை நிறைவடையச் செய்தவர். ராமபிரானின் முதன்மை பக்தனாக திகழும் அனுமனுக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன. 

இங்கு 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும். வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இந்த அனுமனை வணங்கினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.