திருப்பதியில் நாளை வரை இலவச தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2024-05-23 17:17 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் நாளை காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நிற்கின்றனர்.   

Tags:    

மேலும் செய்திகள்