ஐ.பி.எல். வரலாற்றில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை சமன் செய்த கம்மின்ஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

Update: 2024-05-25 05:50 GMT

image courtesy: PTI

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசென் 50 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட் & ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய விக்கெட்டையும் சேர்த்து நடப்பு சீசனில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 17 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வார்னே 19 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஷேன் வார்னே - 19 விக்கெட்டுகள் - ராஜஸ்தான் ராயல்ஸ்

2.அனில் கும்ப்ளே - 17 விக்கெட்டுகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2. பேட் கம்மின்ஸ் - 17 விக்கெட்டுகள் - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

3. அஸ்வின் - 15 விக்கெட்டுகள் - பஞ்சாப் கிங்ஸ்.  

Tags:    

மேலும் செய்திகள்