ரோகித்துக்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக இவரை வளர்த்தெடுக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-23 04:27 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் தரப்பில் பந்துவீச்சில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டும், பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்னும் அடித்தனர்.

இந்நிலையில், ரோகித்துக்கு பின் சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் கேப்டனாக வளர்த்தெடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் பார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதற்கான சான்று. ஜெய்ஸ்வால் மற்றும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வேண்டும். ரோகித்துக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளாதா...? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்