ஹெட்மயர் அதிரடி... இந்தியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.;

Update:2023-08-12 21:47 IST

புளோரிடா,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மேயர்ஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரண்டன் கிங் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனை தொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார்.

அதிரடி வீரர்களான நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மேன் பவல் இருவரும் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹெட்மயர், தனது அதிரடி ஆட்டத்தால், அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்