ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 சீசன்களாக தொடரும் முதலாவது தகுதி சுற்று ராசி

17-வது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-05-27 05:01 GMT

சென்னை,

2 மாத காலங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 18.3 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. கடைசியாக 2014ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்த கொல்கத்தா 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

தொடரும் முதலாவது தகுதி சுற்று (குவாலிபயர் 1) ராசி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதையும் சேர்த்து கடைசி 7 சீசன்களில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியே கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐ.பி.எல்.-ல் முதலாவது தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டியிலும் அந்த அணியை வீழ்த்தி வென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்