ஐ.பி.எல்; இந்த வீரரை ரொம்ப மிஸ் செய்கிறோம் - ரஷித் கான்

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-04-17 05:28 GMT

Image Courtesy: AFP / Twitter 

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. கில் தலைமையிலான குஜராத் அணி 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

கடந்த இரு சீசன்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா நடப்பு தொடரில் மும்பை அணிக்கு மாறியதால் குஜராத் அணியின் கேப்டனாக கில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் குறித்து குஜராத் அணியின் முன்னணி வீரரான ரஷித் கான் கூறியதாவது,

இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் சீனியர் வீரரான முகமது ஷமியை தான் அதிகம் மிஸ் செய்கிறோம். ஏனென்றால் கடந்த 2 சீசன்களிலும் முக்கிய ரோலை செய்தார். புதிய மற்றும் பழைய பந்திலும் குஜராத் அணிக்கு என்ன தேவையோ அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

அது எனக்கு மட்டுமல்லாமல் எங்கள் அணியின் மற்ற பவுலர்களுக்கும் பணியை எளிமையாக்கியது. இந்த சீசனையும் நாங்கள் பாசிட்டிவாக தான் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு வீரரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சில முடிவுகள் எங்களுக்கு சரியாக அமையவில்லை என்றாலும், பவுலர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது தான் வெற்றிக்கு வழிவகுக்கும். ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, ஒமர்சாய், உமேஷ் மற்றும் மொகித் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்