மாநில ஆக்கி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி நடந்தது. இதில் சென்னை, கோவை, நெல்லை உள்பட பல்வேறு பகுதியில் உள்ள

Update: 2017-02-11 22:00 GMT

மதுரை,

கல்லூரிகளில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதி போட்டிக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியும், சென்னை நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தகுதி பெற்றன. இறுதிபோட்டியில் அமெரிக்கன் கல்லூரி அணி 3–0 என்ற கணக்கில் நாசரேத் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடத்தை பெற்றது. இதைதொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றார். தேசிய திட்ட ஆலோசகர் ஸ்பர்காங் தலைமை தாங்கினார். முதலிடம் பெற்ற கல்லூரி அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பி‌ஷப் கிறிஸ்டோபர் ஆசிர் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. விழாவில் உடற்கல்வி இயக்குனர் செஸ்டர் மனுவேல், உடற்கல்வி உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்