மாநில சீனியர் ஆக்கி சென்னை மாவட்ட அணி நாளைமறுநாள் தேர்வு

மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ராமநாதபுரத்தில் வருகிற 18–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2017-02-11 22:18 GMT

சென்னை,

இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட சீனியர் ஆக்கி அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த தகவலை சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்